மக்களின் சிரமத்தை குறைக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி அரசு!

மக்களின் சிரமத்தை குறைக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி அரசு!

ஜெர்மனியில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு வெறும் 9 யூரோக்களில் நாடு முழுவதும் பயணிக்கலாம் என ஜெர்மன் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் பொருளாதார பணவீக்கமானது பல்வேறு நாடுகளை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளும் தங்களது பொதுமக்களை இத்தகைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை அறிவித்து வருகின்றன.
 
அந்தவகையில் ஜெர்மனும் தங்களது மக்களை அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கை செலவு பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு வெறும் 9 யூரோக்களில் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் அகியவற்றில் பயணம் செய்யலாம் என்ற புதிய திட்டத்தை ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.
 
ஆனால் இந்த புதிய போக்குவரத்து சலுகையில் நகரங்களுக்கு இடையேயான ரயில்கள் இடம்பெறவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விலைகுறைந்த பயண திட்டமானது பொதுமக்கள் தங்களது கார்களை கைவிட்டு விட்டு பொது போக்கு வரத்துகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்துடன், எரிப்பொருள் மீதான வரி லீட்டர்க்கு 30 சென்ட்களும் டீசல் மீதான விலையில்14 செண்ட் வரையும் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் பெட்ரோல் விலையானது 2 யூரோகள் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜெர்மனியின் வரிவிகிதமானது ஐரோப்பிய யூனியனின் மிக குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுத் தொடர்பாக ஜெர்மனியின் போக்குவரத்து துறை அமைச்சர் வோல்கர் விஸ்சிங் தெரிவித்த கருத்தில், 9 யூரோக்களில் நாடுமுழுவதும் பயணிக்கலாம் என்ற இந்த விலைக்குறைவான பயணத் திட்டமானது மிகச் சிறந்த வாய்ப்பு, இதில் இதுவரை இந்த திட்டத்தில், 7 மில்லியன் மக்கள் தங்களை பதிவுசெய்து இருப்பது இந்த திட்டம் வெற்றியடைந்து உள்ளது என்பதை குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
 
Deutsche Bahn ரயில் சேவை ஏற்கனவே அதிக நெருக்கடி காரணமாக, ரத்துசெய்யப்படுதல், தாமதமடைதல் போன்ற இன்னல்களை சந்திந்துவரும் நிலையில் இந்த திட்டம் கூடுதல் மக்களை ரயில் பயணத்திற்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் இதுத் தொடர்பாக வோல்கர் விஸ்சிங் அளித்த விளக்கத்தில், 70 சதவிகித நீண்ட தூர ரயில்கள் சரியான நேரத்தை கடைப்பிடிப்பதாகவும், வெறும் 80 சதவிகித ரயில் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டதாகவும் அவற்றில் எத்தகைய குறைபாடுகளும் இதுவரை இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top