ஈரானில் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை!

ஈரானில் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை!

ஈரான் அரசு 'கவர்ச்சியான' விளம்பரம் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி, பெண்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை விதித்துள்ளது. ஈரானின் கலாசார அமைச்சகம், ஈரான் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம், நாட்டின் கடுமையான கற்பு விதிகளின் கீழ் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெறுவதை இரான் அரசு தடை செய்துள்ளது.

ஒரு "கவர்ச்சியான" காட்சி என்று அந்நாட்டில் சொல்லக்கூடிய ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில், இஸ்லாமிய பெண் ஒருவர் தனது ஹிஜாபை தளர்த்தி மேக்னம் ஐஸ்கிரீமைக் கடிப்பதைப் போன்று அமைந்திருந்து.
 
இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களை கோபப்படுத்தியது, அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த விளம்பரம் "பொது மரியாதைக்கு எதிரானது" என்றும், "பெண்களின் மதிப்புகளை" அவமதிப்பதாகவும் அதிகாரிகள் தீர்ப்பளித்தனர்.
 
ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின்" படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
 
வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரானின் விதிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது, இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களையும் "இசைக் கருவிகளை பயன்படுத்துவதை" தடை செய்கிறது.
 
1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் கீழ் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை இஸ்லாமிய குடியரசின் அமலாக்கத்திற்கு எதிராக நாட்டில் பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
போராட்டத்தின் ஒரு பகுதியாக, பல பெண்கள் பொது மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் ஹிஜாப்களை அகற்றினர். பலர் தங்கள் ஹிஜாப் இல்லாமல் பொது இடங்களில் நடப்பதன் மூலம் கைது மற்றும் பொதுமக்களிமிருந்து தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top