தீர்மானத்தால் பதற்றமடையும் இலங்கை!

தீர்மானத்தால் பதற்றமடையும் இலங்கை!

இலங்கையில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009இல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் நடைபெற்ற இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியுள்ளது. 
 
இது தொடர்பாக  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை பேசியது: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட  தீர்மானம் ஆதாரமில்லாதது. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தத் தீர்மானத்துக்கு முந்தைய அரசு அளித்த இணை ஆதரவை தற்போதைய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top