நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரான்ஸ் அதிபர்?

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரான்ஸ் அதிபர்?

நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பெரும்பான்மையை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் அதிபர் தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற தனிப்பெரும்பான்மையைப் பெற வேண்டும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதிக வாக்குகளைப் பெறுபவர்களுக்கே வெற்றி என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பிரான்சில் தனிப்பெரும்பான்மை முறையில் 50 சதவீத வாக்குகளை நிச்சயம் பெற்று இருக்க வேண்டும்.
 
பிரான்சில் இந்த தனிப்பெரும்பான்மை முறை தான் பின்பற்றப்படுகிறது. முதற்கட்ட தேர்தலில் பலரும் போட்டியிடுவார்கள். அதில் யாராவது 50% வாக்குகளைப் பெற்றால் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேநேரம் யாரும் 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அதில் 50% பெறுவோர் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
 
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக தற்போது அதிபராக இருக்கும் மக்ரோன் 27.85% வாக்குகளைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மரைன் லு பென் 23.15% வாக்குகளைப் பெற்றார். இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
 
இதில், மேக்ரான் 58% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரியான லீ பென் 42% வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, மேக்ரான் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 
கடந்த 2017 அதிபர் தேர்தலிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 66.10% வாக்குகளைப் பெற்று மேக்ரான் வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இறுதிகட்ட தேர்தலில் மேக்ரான் பெரும்பான்மையை இழந்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை  இழந்ததால் அவர் புதிதாக சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
 
தனிப்பெரும்பைன்மைக்கு 289 இடங்கள் தேவை. 200-260 இடங்களை மேக்ரான் கூட்டணி பெற்றிருப்பதாகவும், தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாகவும் முதல்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 
இதற்கு முன்பு 1988ம் ஆண்டில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அதேபோன்ற ஒரு சூழ்நிலையை மேக்ரான் எதிர்கொண்டிருக்கிறார்.
 
“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எங்களது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்தார்.
 
வரிகளை குறைப்பது, ஓய்வு பெறும் வயதை, 62ல் இருந்து 65ஆக உயர்த்துவது என, பல திட்டங்களை மேக்ரான் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இவற்றை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் தயவை அவர் நாட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top