மீண்டும் டுவிட்டரில் கலக்கும் ஓவியா!

மீண்டும் டுவிட்டரில் கலக்கும் ஓவியா!

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நடிகை ஓவியா தமிழ் நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

அவருடைய இயல்பான நடவடிக்கைகள், புறம் பேசாத குணம் என பல நல்ல குணங்கள் மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களைக் காட்டிலும் ஓவியாவுக்கு அதிக ரசிகர்களைத் தேடிக் கொடுத்தது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் சிக்கி நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார் ஓவியா.

அதன் பின் சில நாட்கள் கழித்து அவருடைய யு டியுபில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்தார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் ஓவியான் அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டு அவர் திரும்ப பிக் பாஸ் வரமாட்டார் என்பதை உறுதி செய்தார்கள்.

சற்று முன்னர் ஓவியா டிவிட்டரில் மீண்டும் வந்து ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், "உங்கள் ஒவ்வொருவரின் அன்பையும், ஆதரவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் நன்றியுடையவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு பொறுப்பானவளாக இருப்பேன்," என பதிவிட்டுள்ளார்.

ஓவியாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top