புது சிக்கலில் ரஷ்ய அதிபர் புதின்!

புது சிக்கலில் ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னவிதமான பிரச்சனைகள் உள்ளன என்பதை அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. அந்த வரிசையில் அவர் சந்திக்கும் புதிய பிரச்சனை பற்றி செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், அவரது பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை செயலர் நிக்கோல் பட்ருசேவிடம் ரஷ்ய அதிபர் புதின் தனது அதிகாரங்களை தற்காலிகமாக ஒப்படைக்கவுள்ளதாக அமெரிக்காவன் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ரஷ்ய அதிபர் புதினுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், இல்லையெனில் கேன்சர் நோயினால் அவர் கடுமையாக பாதிக்கப்படுவார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் விரைவில் அவர் குணமாகிவிடுவார் எனவும், சிறிது காலம் அவருக்கு ஓய்வு மட்டும் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. புதினுக்கு இதுதவிர வேறு சில உடற்குறைபாடுகள் உள்ளன என அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
 
இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இதுகுறித்து ஆதாரபூர்வமான எந்த தகவலும் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளனர்.
 
ரஷ்ய அதிபர் புதின் ஒருவேளை, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் செயலர் நிக்கோல் பட்ருசேவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தால், ரஷ்யாவின் நிலை இன்னமும் மோசமடையும், மிகவும் கொடூரமாக சர்வதேச விவகாரங்களில் அவர் நடந்து கொள்வார் என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டு மீது மேற்கொண்டுள்ள போரில் சர்வதேச அளவில் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் பொறுப்புகளை புதிதாக ஏற்கவுள்ளவரும், புதினை விட கடுமையாக நடந்து கொண்டால், உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தலைவலிதான் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வருகின்றன.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top