தன்பாலின சேர்க்கையாளராக நடித்திருக்கும் அஞ்சலி

தன்பாலின சேர்க்கையாளராக நடித்திருக்கும் அஞ்சலி

'பாவ கதைகள்' என்ற ஆந்தாலஜி பாணியிலான திரைப்படம் ஒன்றில் நடிகை அஞ்சலி தன்பாலின சேர்க்கையாளராக நடித்து பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர்கள் சுதா கொங்கரா, கௌதம்மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் 'பாவ கதைகள்' என்ற பெயரில் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். இம்மாதம் 18ஆம் திகதியன்று நெட்பிளிக்ஸ் இன்னும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கும் இதன் டீசர் அண்மையில் வெளியானது.
 
இதில் நடிகை அஞ்சலி, பொலிவுட் நடிகை கல்கி கொச்லின் மற்றும் பதம் குமார் ஆகியோர் நடித்திருக்கும் அத்தியாயம் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இதில் நடிகை அஞ்சலியும், பொலிவுட் நடிகை கல்கி கொச்சிலினும் தன்பாலின சேர்க்கையாளராக நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே உதட்டுடன் உதடு பொருத்தி முத்தம் கொடுக்கும் காட்சிகள் இருப்பதாகவும் இவை டிஜிட்டல் தள ரசிகர்களை ஈர்க்கும் என்றும் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
 
'அங்காடித் தெரு' உள்ளிட்ட விருது பெற்ற படங்களில் தன் திறமையை வெளிப்படுத்திய நடிகை அஞ்சலி, தன்பாலின சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
 
'பாவ கதைகள்' என்ற ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கதைகள் அனைத்தும் காதலை மையப்படுத்தியும், அதனை அந்தஸ்து, கௌரவம் கருதி ஆணவ கொலை நடைபெறுவது போலவும் இடம்பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top