அமெரிக்காவில் குடியேற்ற முறைகளில் மாற்றங்கள்!

அமெரிக்காவில் குடியேற்ற முறைகளில் மாற்றங்கள்!

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற, ஜோ பைடன், குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். முந்தைய அதிபர், டொனால்டு டிரம்ப் பிறப்பித்த பல கடுமையான விதிகளை, சட்டங்களை ரத்து செய்யும் வகையில், இந்த உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகின்றன. அந்த வரிசையில், அவர், மூன்று புதிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே உள்ள குடியேற்ற நடைமுறைகளை ஆய்வு செய்யவும், சிறப்பான குடியேற்ற கொள்கையை உருவாக்க ஆலோசனைகளை வழங்கவும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த, 180 நாட்களுக்குள் நிபுணர் குழுவிடம் இருந்து பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில், குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் இந்தியர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கும்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top