WhatsApp ஒரே நேரத்தில் அறிமுகமானது பல அசத்தலான அம்சங்கள்

WhatsApp ஒரே நேரத்தில் அறிமுகமானது பல அசத்தலான அம்சங்கள்

வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் பல அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் குரல் செய்திகளுக்கானது. ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் புதிய அம்சங்கள் குறித்த தகவலை ஃபேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். புதிய அப்டேட்டிற்குப் பிறகு பயனர்கள் என்ன மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை ஜூக்கர்பெர்க் தனது பதிவில் காட்சிப் பதிவு மூலம் காட்டியுள்ளார்.

ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அவற்றை பாஸ் செய்யும் அம்சம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில அம்சங்கள் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.
 
இதன்படி Out of Chat Playback என்ற அம்சம் இதில் இடம்பெறௌள்ளது. இதன்மூலம் பயனர்கள் சேட்டிற்கு வெளியேயும் வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும். அதாவது ஒருவரது சேட் பாக்ஸில் இருந்து வெளியே வந்தாலும் கூட அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் பின்னால் பிளே ஆகும்.
 
Pause/ Resume Recording- நாம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் போது அவற்றை பாதியில் நிறுத்திவைத்து பின்னர் மீண்டும் அனுப்பும் வகையில் இந்த அம்சம் இடம்பெறுகிறது.
 
Draft Preview: நாம் பேசி முடித்த வாய்ஸ் மெசேஜை அனுப்புவதற்கு முன் நாமே கேட்கும் வகையில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.
 
Waveform Visualaization: நாம் அனுப்பும் ஆடியோ வேவ் அமைப்பில் தெளிவாக காட்டப்படும். இதன்மூலம் நாம் ரெக்கார்ட் செய்யும்போதும், கேட்கும்போதும் எதுவரை கேட்டிருக்கோம் என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
 
Remember Playback: இதன்மூலம் வாய்ஸ்மெசேஜ் கேட்பதை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தால், எதில் இருந்து விட்டோமோ அதில் இருந்தே மெசேஜ் பிளே ஆகும்.
 
Fast Playback on forwarded messages: நமக்கு வந்த வாய்ஸ் மெசேஜ்ஜை நாம் கூடுதல் வேகத்தில் கேட்கும் வகையில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது.

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top