ரெக்க கட்டி பறக்கும் கேடிஎமின் புதுவரவுகள்!

ரெக்க கட்டி பறக்கும் கேடிஎமின் புதுவரவுகள்!

ஒரு இளைஞனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்திருக்கோ இல்லையோ நிச்சயம் பைக்குகளின் மீது வந்திருக்கும். இன்று இளசுகளின் நாடித்துடிப்பாக சூப்பர் பைக்குகள்தான் நகர்வலம் வருகின்றன. சூப்பர் பைக் என்றாலே அது கேடிஎம் தான் என்கிற ஒரு அளவிற்கு ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா நாடு பைக் இடம்பிடித்துள்ளது. 2007ம் ஆண்டு பஜாஜ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவிற்குள் நுழைந்த கேடிஎம், ட்யூக், மற்றும் RC பைக் வகைகளை இந்த ஆண்டு முற்றிலும் புதிய அம்சங்களோடு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி மதுரை கேடிஎம் ஷோரூமின் மேலாளர் பாலா அவர்களிடம் கேட்டபொழுது:

கேடிஎம் பைக்குகள் இன்று இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு கனவு பைக்காகவே இருக்கிறது. கேடிஎம்மில் முன் அமைப்போடு RC என்னும் பைக்கும், டியூக் என்று Naked பைக்கும் இந்தியாவில் உள்ளது. இவ்வாண்டு இரண்டு பைக்குகளிலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு தற்போது களமிறங்கியுள்ளது.

2017 RC 200 and RC 390 RC பைக் 200CC மற்றும் 390CC திறனோடு BS & IV மாசு விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டுள்ள இன்ஜின், புதிய பாடி கிராஃபிக்ஸ் - கலர் ஆப்ஷன், 10 லிட்டர் ஸ்டீல் பெட்ரோல் டேங்க், சொகுசுக்காக முன்னேற்றப்பட்ட இருக்கை (12மிமீ குஷனிங்), புதிய அகலமான ரியர் வியூமிரர்கள், கூடுதல் ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கும் Metzeler டயர்கள், AHO வசதி, அப்டேட்டட் இன்ஸ்ட் ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இரண்டு பைக்கிலும் செய்யப்பட்டுள்ள பொதுவான மாற்றங்கள். RC200 பைக்கின் முன்பக்க டிஸ்க் பிரேக்கின் அளவு, 280மிமீயில் இருந்து 300மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல கேடிஎம் RC 390 பைக்கின் முன்பக்க டிஸ்க் பிரேக்கின் அளவு, 300மிமீயில் இருந்து 320மிமீ ஆக உயர்ந்திருக்கிறது. புதிய 2 ஸ்டேஜ் அலுமினியம் எக்ஸாஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு பைவயர் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பைவிட கேடிஎம் RC 390 பைக்கின் எடை 4.5 கிலோ அதிகரித்திருந்த போதிலும், இன்ஜின்டார்க்கில் 1Nm ஏற்றம் இருப்பதால், பெர்ஃபாமென்ஸில் மாற்றம் இருக்காது.

2017 KTM Duke 200 and 390 புதிய டியூக் சிரீஸ் பைக்குகளில் BS & IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டுள்ள இன்ஜின், 3 புதிய கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷன், சொகுசான இருக்கை, ஒன் டச் எலெக்ட்ரிக் ஸ்டார்ட், AHO ஹெட் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி பழைய டியூக் 200 போலவே, 199.5சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், சிங்கிள் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - USD/மோனோஷாக் சஸ்பென்ஷன், 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் - டிஜிட்டல் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல அலாய்வீல் டிஸைனில் மாற்றமில்லாவிட்டாலும், அது கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருப்பதுபோல ஆரஞ்ச் நிறத்தில் இருப்பது ஸ்போர்ட்டியாக இருக்கிறது.

2017 KTM Duke 390: முற்றிலும் புதிய டியூக் 390 பைக், பைக் ஆர்வலர்களின் ட்ரீட். இதன் டிசைன் 1290 சூப்பர் டியூக் பைக்கைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. LED DRL மற்றும் ஹெட்லைட், பெரிய 13.5 லிட்டர் ஸ்டீல் பெட்ரோல் டேங்க், அட்ஜஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்கள், ஸ்மார்ட்ஃபோன் கனெக் டிவிட்டியுடன் கூடிய TFT LCD டிஸ்பிளே என முன்பை விட அதிக சிறப்பம்சங்கள், 2017-ம் ஆண்டுக்கான டியூக் 390 பைக்கில் இடம் பிடித்துள்ளன.

இதில் இருப்பது அதே 373.3CC இன்ஜின்தான் என்றாலும், ரைடு பை வயர் - அலுமினியம் எக்ஸாஸ்ட் உதவியுடன், BS & IV விதிகளுக்கு ஏற்ப இது ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. எனவே பவரில் மாற்றமில்லாவிட்டாலும், டார்க்கில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அதே போல, ஸ்ப்ளிட் சீட் - ஸ்ப்ளிட் கிராப் ரெயில் - ஸ்ப்ளிட் LED டெயில் லைட் ஆகியவை முற்றிலும் புதிது. இரண்டு பாகங்களால் ஆன ஸ்ப்ளிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - அலுமினியம் ஸ்விங் ஆர்ம் அமைப்பில், தனித்தனியே இயங்கக்கூடிய Open Cartridge USD ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கமான பைக்குகளில், முன்பக்கத்தில் இருக்கும் இரு ஃபோர்க்குகளும் ஒரே வகையில் செயல்படும். புதிய டியூக்கில் பொருத்தப்பட உள்ள ஃபோர்க்கில் ஒன்று Damping பணியையும், மற்றொன்று Rebound பணியையும் மேற்கொள்ளும். எனவே, அற்புதமான கையாளுமையுடன், சிறப்பான ஓட்டுதல் தரமும் ஒரு சேரக்கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதே போல, முன்பக்க டிஸ்க் பிரேக்கின் அளவும் 320மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனுக்குப் பாதுகாப்பாக கவர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல பைக்கில் இருக்கும் Bosch ஏபிஎஸ் சிஸ்டத்தில், Road & super Moto என இரு செட்-அப் இருக்கின்றன. இதனை ஹேண்டில்பாரின் இடப்பக் கத்தில் இருக்கும் ஸ்விட்ச் வாயிலாக கன்ட்ரோல் செய் யலாம். ஒரே UV கலர் - கிரா ஃபிக்ஸ் ஆப்ஷனில் கிடைக் கும் இந்த பைக்கின் எடை 163 கிலோ.

2017 KTM Duke 250: மேலே சொன்ன இரண்டு பைக்குகளுக்கு இடையே, டியூக் 250 பைக்கைப் பொசிஷன் செய்துள்ளது. இதன் டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள், டியூக் 390 பைக்கைப் போலவே இருந்தாலும், அதில் இருந்த LED ஹெட்லைட் – TFT LCD டிஸ்பிளே, ரைடு பை வயர், ஏபிஎஸ், Metzeler டயர்கள் போன்றவை இங்கு இல்லை; மேலும் 2 UV கலர் - கிராஃ பிக்ஸ் ஆப்ஷன் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக்கின் சைஸிலும் வித்தியாசம் தெரிகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 248.76CC, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின், 30bhp@ 9000 rpm பவர் - 2.4kgm@ 7500 rpm டார்க்கை யும் வெளிப்படுத்துகிறது.

ஸ்லிப்பர் கிளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பைக்குடன் ஒப்பிடும்போது, இதன் கறுப்பு அலாய் வீலில் Pin Strip மட்டுமே இருக்கிறது. டியூக் 200-ல் இருந்த அதே டிஸ்க் பிரேக் செட்-அப், டிஜிட்டல் மீட்டர்தான் டியூக் 250-ல் இருக்கிறது என்றாலும், பிரேக் - கிளட்ச் லீவர், ஃபுட் பெக், Belly Pan - ரேடியேட்டர், இக்னிஷன் ஸ்லாட் வடிவமைப்பில் மாற்றம் தெரிகிறது.‘ என கூறினார்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top