த்ரிஷா அழகுக்கு யோகாதான் காரணம்: பேட்ட ரஜினி மகிழ்ச்சி!

த்ரிஷா அழகுக்கு யோகாதான் காரணம்: பேட்ட ரஜினி மகிழ்ச்சி!

த்ரிஷாவின் அழகுக்கும் இளமைக்கும் யோகாதான் காரணம் என்று பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், பேட்ட. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ் என பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
 
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
 
பேட்ட படத்தில் ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷன் இருக்கு. அதுக்கு எந்த நடிகை நடிக்க சம்மதிப்பாங்கன்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்ப, கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். ரெண்டுநாள் கழிச்சு, த்ரிஷா சார்னு சொன்னாரு.
 
த்ரிஷாவா. என்னங்க இது. இன்னிக்கி இண்டஸ்ட்ரில முக்கியமான நடிகை. ஏகப்பட்ட ரசிகர்கள் அவங்களுக்கு இருக்காங்க. படத்துல அவங்க நடிக்கிறேன்னு சொன்ன கேரக்டருக்கு பாட்டு கூட கிடையாது. இதெல்லாம் சொல்லியும் ஒத்துக்கிட்டாங்களான்னு கேட்டேன்.
 
இப்படியொரு வாய்ப்புக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தேன். தலைவரோட நடிக்கறதே சந்தோஷம்னு த்ரிஷா சொன்னாங்க சார்னு கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
 
த்ரிஷா அறிமுகமான நாள்லேருந்து அவங்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவங்க அன்னிக்கி எப்படி இருந்தாங்களோ அப்படித்தான் இப்பவும் இருக்காங்க. அவங்களோட அதே அழகுக்கு காரணம் யோகாதான் காரணம். தியானம்தான் காரணம்.
 
யோகா செஞ்சா, முகம் மட்டுமில்ல, மனசும் மலர்ச்சியாத்தான் இருக்கும். உடம்பு ஹெல்த்தியா இருக்கற அதேநேரம் மனசும் ஃப்ரெஷ்ஷாத்தான் இருக்கும். த்ரிஷா, யோகா பண்றாங்க. அதான் இந்த அழகுக்குக் காரணம்.
 
இவ்வாறு ரஜினி பேசினார்.

Tags: News, Hero, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top