முதல் ரோபோ செய்தி தொகுப்பாளர்

முதல் ரோபோ செய்தி தொகுப்பாளர்

உலகின் முதல் ரோபோ செய்தி தொகுப்பாளரை சீனாவில் உள்ள சின்ஹுவா என்ற செய்தி ஊடகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செய்தி தொகுப்பாளர் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞான அடிப்படையில் செயல்படுகின்றது. ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தற்போது வேகமாக உலகெங்கிலும் வளர்ந்து வருகின்றது. இந்த நிலையில், சீனாவில் சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் சோகோவ் என்ற நிறுவனத்தினிடம் இணைந்து வியுவ் ஜென்னில் நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் ஏ1 ரோபோ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. 

பார்ப்பதற்கு உண்மையான மனிதன் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த ஏ1 செய்தி தொகுப்பாளர், மனிதர்களை போன்றே பாவனையில் செய்திகளை வாசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. சின்ஹுவா நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரும் செய்தி தொகுப்பாளர் ஒருவரின் உருவம் மற்றும் அவரது குரல் வளம் ஆகியவை இந்த ஏ1 செய்தி தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரோபோ தானாகவே ஊடகத்திலிருந்து செய்திகளை எடுத்து வாசிக்கும் ஆற்றல் கொண்டதாகும். 
 

Tags: Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top