'ஸ்டார்' ஆகும் ஹரிஷ் கல்யாண்

\'ஸ்டார்\' ஆகும் ஹரிஷ் கல்யாண்

இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'ஸ்டார்' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
 
'பியார் பிரேமா காதல்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். எழில் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை  தயாரித்து இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
 
'தனுசு ராசி நேயர்களே' 'தாராள பிரபு' ஆகிய வெற்றிப்படங்களின் நாயகனும், பிக் பொஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
 
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top