நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!

நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!

தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு விலக்குகோரியும் தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது குடியரசுத்தலைவர் அனுமதி பெருவதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்து பரிசீலனை செய்யாமல் அந்த மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்திருந்தார்.
 
இதனை தொடர்ந்து அந்த மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், இரண்டாவது முறையாக அனுப்பும் மசோதா மீது அளுநரும், குடியரசுத்தலைவரும் பதில் அளித்தாக வேண்டும் என்பது விதிமுறையாகும் எனவும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
 
இதனையடுத்து நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மாதத்தில் அனுப்பப்பட்ட இந்த மசோதா தொடர்பாக இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா மக்களவையில் கேள்வி எழுப்பினார். குறிப்பாக நீட் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாடு என்ன.? தமிழக அரசால் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்றதா.? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
 
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்,  குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருவதாக கூறினார். அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி "நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி" தமிழக அரசால் இயற்றப்பட்டு  குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுபட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை எனக்கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top