மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் திங்கள்கிழமை (பிப்.22) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top