பொறுப்பேற்ற ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டு!

பொறுப்பேற்ற ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டு!

திமுக பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். காவிரி மற்றும் அதன் கிள்ள ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அதற்கு ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டது, குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிக அளவில் இழப்பீடு பெற்று தந்தது அதிமுக அரசு, 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், அதிலும் விவாசயிகளுக்கு மும்மனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு.
 
தாலிக்கு தங்கம் என்னும் அற்புதமான திட்டத்தை ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த பெண்கள் கல்வியை ஊக்குவிக்க அறிவித்து செயல்படுத்தியது அதிமுக அரசு. கொரானோ காலத்திலும் அதிக தொழில் மூதலிட்டை ஈர்த்தது அதிமுக அரசு. நீட் தேர்வு ரத்து குறித்து சட்டமன்ற பொது தேர்தலின் போது அறிவித்தார்கள், நீட் தேர்வு கொண்டுவந்த்தும் திமுக தான், ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் அவர்கள் தான், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் கொண்டு வந்தது அதிமுக அரசு. அவர்களுக்கு மருத்துவம் அளிப்பது கூட இன்றைக்கு இவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு, சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொறுத்தி உள்ளோம்.
 
அதக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம்அதிக அளவிலான தார்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி கட்டினோம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை 7.5% இட ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றியது அதிமுக அரசு, இப்படி பல்வேறு பெரிய்திட்டங்களை நிறைவேற்றி சாதனை மேல் சாதனை படைத்தது அதிமுக அரசு.ஓராண்டு சாதனையை வெளியிட்டுள்ளார். மக்கள் வேதனை மேல் வேதனை படுகின்றனர், அவர்கள் செய்தது சாதனை அல்ல வேதனை. நாட்டிலேயே எங்கும் தயாரிக்க முடியாத வகையில் ஒழுகும் வெல்லத்தை மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் கொடுத்தனர் என்று கடுமையாக சாடினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top