மாஸ்டர் பட சாதனையை முறியடித்த கே ஜி எஃப் சப்டர் 2

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் கே ஜி எஃப் சப்டர் 2 டீசர் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தென்னிந்திய நடிகரான யஷ் கன்னடத்தில் வெளியான 'கே ஜி எஃப் சாப்டர் 1' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக உயர்ந்தார். 80 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான 'கே ஜி எஃப் சப்டர் 1' படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் இந்தியா முழுவதும் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்திய திரை உலகில் அதிக வசூல் சாதனை செய்த முதல் கன்னட திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
 
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரானது. இதில்  கதாநாயகனாக யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்கள். பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாகவும், மூத்த பொலிவுட் நடிகை ரவீனா தாண்டன் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 200 கோடி ரூபாய் பட்ஜட்டில் மிக பிரம்மாண்டமான முறையில் கே ஜி எஃப் சப்டர் டூ தயாராகியிருக்கிறது. இதனை கே ஜி எஃப் சப்டர் 1 இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படத்தின் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற ஆவல் இந்தியா முழுவதும் எழுந்தது. படக்குழுவினரும் இதனை உணர்ந்து நேற்று இரவு 12 மணியளவில் இப் படத்தின் டீசரை இணையத்தில் வெளியிட்டனர். வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் இப்படத்தின் டீசரை 78 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள். அத்துடன் புதிய சாதனையாக இப்படத்தின் டீசரை நான்கு மில்லியன் பார்வையாளர்கள் லைக் செய்திருக்கிறார்கள்.
 
இதற்கு முன்னர் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டீஸராக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டீசர் சாதனை புரிந்தது. அப்படத்தின் டீசரை 1.85 மில்லியன் பார்வையாளர்கள் லைக் செய்திருந்தனர். அதனை கடந்து தற்போது புதிய சாதனைiயை கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் டீஸர் நிகழ்த்தியிருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top