எய்ம்ஸ் பணிகள் மதுரையில் விரைவில் துவங்கும்!
Posted on 13/02/2021
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக, 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.ஜப்பான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் சில சிக்கல்கள் எழுந்ததை அடுத்து, பணிகள் தாமதமாகின.