யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் கலகலப்பு 2!

யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் கலகலப்பு 2!

2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் 'கலகலப்பு'. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப் படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 'கலகலப்பு 2' படத்தை சுந்தர். C இயக்க அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான 'கலகலப்பு 2' படத்தின் டீசர் யூ டியூபில் No.1 - ல் டிரென்டிங்கில் இடம் பெற்றது. மேலும் தற்போது 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

'கலகலப்பு - 2' படத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். 'கலகலப்பு 2' படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top