உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான 94 வயது பாட்டி!

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான 94 வயது பாட்டி!

நடப்பு ஆண்டுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இந்தியாவைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை தம்பேரில் நடைபெற்றது. 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடர், ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் நடைபெற்றது.
 
டாம்பயரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். அவர் 100 மீட்டர் இலக்கை 24.74 வினாடிகளில் கடந்து வெற்றிவாகை சூடினார்.
 
இதுகுறித்து "இந்தியாவின் 94 வயதான பகவானி தேவி  வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்!. அவர் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 24.74 வினாடிகளில் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். விளையாட்டில் சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை பகவானி தேவி நிரூபித்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரிய முயற்சி!," என்று விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ட்வீட் செய்தது.
 
தடகளம் மட்டுமின்றி குண்டு எறிதல் பிரிவிலும் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதை தொடர்ந்து, மொத்தமாக மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top