கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வைஷாலியைக் கைபிடித்தார்!

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வைஷாலியைக் கைபிடித்தார்!

இந்திய அணி வீரரான விஜய் சங்கர் வைஷாலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
 
வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதைக் கடந்த ஆகஸ்ட் மாதம் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்தார். 
 
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடுகிறார். இந்நிலையில் வைஷாலியை விஜய் சங்கர் திருமணம் செய்த தகவலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் திருமணப் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top