அஜித் 61 பட டைட்டில் இதுதானா?

அஜித் 61 பட டைட்டில் இதுதானா?

அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் இரண்டாவது படமான வலிமை கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் வசூல் சாதனைகள் அனைத்தயும் வலிமை முறியடித்துவிட்டதாக வந்த தகவல் அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

தற்போது அஜித் ஹெச் வினோத் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. அதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த படத்தின் டைட்டில் என்ன என்பதும் பூஜை நாள் அன்றே அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் AK61 படத்தின் டைட்டில் 'வல்லமை' என ஒரு செய்தி இணையத்தில் அதிகம் வைரல் ஆனது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை, டைட்டில் என்ன என்பது பூஜை அன்று படக்குழுவினர் அறிவித்தால் தான் உறுதியாக தெரியவரும். 
 
AK61 படத்திற்காக அஜித் வெள்ளை முடி, தாடி என தனது தோற்றத்தினை முழுமையாக மாற்றி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top