மூன்றாவது டெஸ்டில் வார்னர் பங்கேற்பது சந்தேகமே!
Posted on 28/12/2020
சிட்னியில், வரும் ஜன. 7ல் துவங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக நேற்று, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வார்னர் வலைப்பயிற்சி மேற்கொண்டார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘‘வார்னரின் வலைப்பயிற்சியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இவரது இடுப்பு பகுதியில் லேசான தொந்தரவு இருப்பதாக தெரிகிறது. இவர், 3வது டெஸ்டில் விளையாடுவார் என்று நம்புகிறோம். இப்போட்டிக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது,’’ என்றார்.