ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் உமர் குல் நியமனம்!

ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் உமர் குல் நியமனம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் கிரஹாம் தோர்பே அண்மையில் நியமிக்கப்பட்டார். ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் 0-4 என இழந்ததையடுத்து, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கிரஹாமை ஆப்கானிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளராக நியமித்தது.
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட், 130 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் ஆடியுள்ள உமர் குல் முறையே, 163, 179 மற்றும் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் 6 போட்டிகளில் ஆடி 12 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
 
பாகிஸ்தான் அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்ந்த உமர் குல், பவுலிங் பயிற்சியாளர் பதவியிலும் அனுபவம் வாய்ந்தவர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்துவருகிறார். லங்கா பிரீமியர் லீக் தொடரில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
 
அந்தவகையில், பவுலிங் பயிற்சியாளர் பதவியில் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தானின் முன்னாள் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான உமர் குல் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ம் தேதி ஆஃப்கான் அணி கேம்ப்புடன் இணைகிறார் உமர் குல். 3 வாரங்களுக்கு பவுலிங் பயிற்சியாளராக குல் இருப்பார். அதன்பின்னர் எல்லாம் சாதகமாக அமையும்பட்சத்தில், பவுலிங் பயிற்சியாளராக உமர் குல் தொடர்வார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top