இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு சிறப்பான எதிர்காலம்!

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு சிறப்பான எதிர்காலம்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா கண்டறிந்த ஒரு புதிய இடது கை வேகப் பந்துவீச்சாளர் நடராஜன். ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரரும் அவர் தான்.

இந்த நிலையில், அவரது எதிர்காலம் குறித்து அவர் எப்படி திட்டமிட வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை கூறி உள்ளார்.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறுகையில், "நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய செய்ய வேண்டும். அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை அவர் சரி செய்ய வேண்டும். அவரிடம் தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசும் திறன் உள்ளது. அவர் தன் உடலை பந்துக்கு பின் கொண்டு செல்ல வேண்டும், அப்போது தான் பந்தை பேட்ஸ்மேனுக்கு மிக அருகே கொண்டு செல்ல முடியும்" என்றார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top