பீஸ்ட் - குர்கா காப்பி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் நெல்சன்!

பீஸ்ட் - குர்கா காப்பி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் நெல்சன்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே தான் போகிறது.
 
ஏற்கனவே இப்படத்தின் முன்பதிவு அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அதன் வரவேற்பை பார்த்து பீஸ்ட் திரைப்படம் இதுவரை வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் சாதனையை பீஸ்ட் முறியடித்து விடும் என கூறிவருகின்றனர்.  
 
இதனிடையே இயக்குனர் நெல்சன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பீஸ்ட் படத்தை காப்பி என கூறிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
அதன்படி கூறியதாவது "ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் புதிதல்ல, பல படங்கள் வந்திருக்கு. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சியமைப்பிலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் ஒரே மாதிரியான காட்சிகள் வருவது தவிர்க்க முடியாது.
 
நானும் குர்கா படத்தை பார்த்தேன், அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மனி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை. 
 
படத்தின் முதல் ஷோ 4 மணிக்கு ஆரம்பம் ஆகுது, பிரீமியர் ஷோஸும் மற்ற நாடுகளில் நடக்குது. மக்களுக்கு சீக்கிரமே தெரிஞ்சிடும் படம் இப்படி தான் இருக்கும்னு" என பேசியுள்ளார். 

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top