இந்தியா ஜனாதிபதி வேட்பாளர் ஆகின்றாரா ரஜினிகாந்த்?

இந்தியா ஜனாதிபதி வேட்பாளர் ஆகின்றாரா ரஜினிகாந்த்?

ரஜினியை பல ஆண்டுகளாக பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜனாதிபதி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்களில் கூறப்படுவதாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடும் எண்ணத்தை அவர் கைவிட்டார்.
 
இதனை அடுத்து சினிமாவில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தலைவர் 169 படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . ரஜினி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் தென்னிந்தியாவில் அவரை எதிர்க்க எந்த அரசியல் கட்சியும் முன் வராது என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது.
 
வட இந்தியாவை பொருத்தவரை பல மாநிலங்களில் பாஜக பலமாக இருப்பதால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ரஜினியை போட்டியிட வைக்கலாமா என்ற ஆலோசனை பாஜகவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தலைவர் 169 திரைப்படம் டிராப் ஆகும் என்று கூறப்படுகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top