அதானி மனைவிக்கு ராஜ்யசபா எம்பி பதவியா?

அதானி மனைவிக்கு ராஜ்யசபா எம்பி பதவியா?

பிரபல தொழிலதிபர் அதானியின் மனைவிக்கு ராஜ்யசபா எம்பி தர அரசியல் கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதானி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது .

நாடு முழுவதும் ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொழிலதிபர் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானி ஆகிய இருவரில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால் இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’அதானி குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் அரசியலில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ அல்லது ராஜ்யசபா எம்பி மூலம் பாராளுமன்றம் செல்லவோ விருப்பமில்லை என்றும் இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அதானி குடும்பத்தினருக்கு எம்பி பதவியை வழங்க உள்ளதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top