இரகசிய வாக்கெடுப்பை நிராகரித்த சபாநாயகர் தனபால்!

இரகசிய வாக்கெடுப்பை நிராகரித்த சபாநாயகர் தனபால்!

சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். சபை கூடியதும், எதற்காக அது கூட்டப்பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்தார். பின்னர் பெரும் அமளிக்கிடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினார். இத்தனை அவசரமாக ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் பேசினார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். எனினும் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top