வேறொரு உயரத்தில் பயணிக்க துவங்கும் தமிழ் சினிமா - 2.0

வேறொரு உயரத்தில் பயணிக்க துவங்கும் தமிழ் சினிமா - 2.0

இந்தியத் திரையுலகின் மற்றுமொரு பெருமையாக உருவாகி வரும் தமிழ்ப் படமான '2.0' படத்தின் தயாரிப்பு வீடியோ நேற்று மாலை யுடியுபில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்ததுமே தமிழ் சினிமா வேறு ஒரு உயரத்தில் பயணிக்கத் தயாராகி வருகிறது என்பது உறுதியாகிவிட்டது.

ராஜமௌலி உருவாக்கிய 'பாகுபலி' படத்தை விடவும், '2.0' தென்னிந்திய சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் இந்த உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம்தான் நேற்று வெளியாகியுள்ள வீடியோ. இந்த வீடியோ பற்றி அக்ஷய்குமார், "இது ஒரு படம் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் அனுபவம்", எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை இயக்குனர் முத்துராஜ் ஆகியோரது திறமையான உழைப்பில் நேற்று வெளியாகியுள்ள '2.0' வீடியோ யுடியுபில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

'கபாலி' படத்தின் மூலம் ரஜினிகாந்த் படைத்த சாதனையை திரும்பவும், '2.0' படத்தின் மூலம் ரஜினிகாந்த் மட்டுமே முறியடிக்க முடியும்.

 

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top