தெலுங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு!

தெலுங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு!

அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து தெலுங்கான மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ரயில்களுக்கு தீ வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் எனும் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம் , உள்ளிட்ட மாநிலங்களில் 3 வது நாளாக இத்திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 2 நாட்களாக வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இன்று தென் மாநிலமான தெலுங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பல்வேறு மாநிலங்களில் போராட்டகாரர்கள் யணிகள் ரயில் பெட்டிகளை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியும் நெடுஞ்சாலையில் கற்கள் வைத்து மறித்தும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை எரித்துள்ளனர். 
 
மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இதனால் நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 35 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் ரயிலுக்கு தீவைத்தனர். 
 
அங்கு நிலைமை கட்டுபாட்டை மீறி செல்ல பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.செகந்திராபாத் ரயில் நிலையத்தில் போராட்டங்கள் பெரிய அளவில் வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசார் வான்வழி தூப்பாக்கி சூடு நடத்தியதாக பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும் 3 மணி நேரத்திற்கு மேலாக ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் 3 ரயில்களுக்கு தீ வைத்ததாகவு செய்தி வெளியாகியுள்ளன.
 
இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் தற்போது வரை சுமார் 300 மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செகந்திராபாத் ரயில் நிலையம் செல்லாத படி, அனைத்து ரயில்களும் திருப்பி விடப்படுகின்றன. மேலும் இதுவரை 71 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top