வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் சிலிண்டர் விலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மாற்றம் செய்தது. அதன்படி 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை தலைநகர் டெல்லியில் ரூ.198ம், கொல்கத்தாவில் ரூ.182ம், மும்பையில் ரூ.190.50 ஆகவும், சென்னையில் ரூ.187ம் குறைந்தது. வணிக சிலிண்டரின் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1053க்கும், சென்னையில் ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.8.50 காசுகள் குறைந்து ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இந்த மாதத்தில் 2 முறை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த மே 7 ம் தேதி 1015.50 ஆகவும், கடந்த மே 19ம் தேதி ரூ.1018.50 ஆகவும் இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று மேலும் 50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top