இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 13,834.54 கோடி கடன் உதவி - தமிழ்நாட்டுக்கும் பங்கு!

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 13,834.54 கோடி கடன் உதவி - தமிழ்நாட்டுக்கும் பங்கு!

உலக வங்கி: நாட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு உலக வங்கி 13,834.54 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த கடனில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.   

நாட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு உலக வங்கி 13,834.54 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த கடனில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.   
 
இந்தியாவின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கு என்று உலக வங்கியின் செயல் இயக்குநர்கள் இரண்டு தவணையாக 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளனர். நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு இந்த கடன் நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
 
இந்தக் கடனில் ஒரு சிறு பகுதி ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஓடிஸா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. மொத்த நிதியில் ஒரு பில்லியன் டாலர் சுகாதார துறைக்கும், மீதமுள்ள 750 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார்நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
 
கடந்த காலங்களில் இந்தியாவின் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 1990ஆம் ஆண்டில் இந்திய மக்களின் சராசரி ஆயுள் 58 ஆக இருந்துள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 69.8 வயதாக அதிகரித்துள்ளது. 
 
இந்திய சராசரி வருமானத்திற்கு ஏற்ப இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 1000 பேருக்கு 30 ஆக இருக்கிறது. குழந்தை பிறப்பின்போது இறக்கும் சதவிகிதம் 1,00,000க்கு 103ஆக உள்ளது. இத்துடன் கொரோனாவுக்குப் பின்னர் சுகாதாரத்துறையில் திறனை மேம்படுத்துவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
 
இந்தியாவில் வருடாந்திர நிதி இடைவெளி 1825 கோடியாக ஆக இருக்கிறது. அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 4 சதவிகிதமாக இருப்பது  தெரிய வந்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top