வாடிக்கையாளர்களின் ரசீதில் சேவை வரியை சேர்க்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி!

வாடிக்கையாளர்களின் ரசீதில் சேவை வரியை சேர்க்கக்கூடாது: மத்திய அரசு அதிரடி!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சேவை வரியை செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதற்கான விலை ரசீதில் சேவை வரி சேர்த்து வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வாறு விதிகளை மீறி சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும், மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top