இந்திய ரயில்வேயில் தனியார் மயமில்லை; ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

இந்திய ரயில்வேயில் தனியார் மயமில்லை; ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

மக்களவையில் ரயில்வே துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது:

இந்திய ரயில்வே ஒவ்வொரு இந்தியரின் சொத்து. இதில் தற்போதைய நிலையே தொடா்ந்து நீடிக்கும். எனவே இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது. ஆனால் ரயில்வே துறை மேலும் சிறப்பாக செயல்பட இத்துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.
 
வரும் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் இந்திய ரயில்வேயை முழுவதும் மின்சாரமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 5,500 கி.மீ. தூர தண்டவாளங்கள் தனியாா் கட்டுப்பாட்டில் விடப்படவுள்ளது.
 
கடந்த 2 ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் ஒரு பயணியும் கூட உயிரிழக்கவில்லை. பயணிகள் பாதுகாப்பில் ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.
 
இதனைத்தொடா்ந்து 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே துறையின் மானியக் கோரிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top