பிரசாந்த்துடன் இணையும் மூத்த நடிகர்

பிரசாந்த்துடன் இணையும் மூத்த நடிகர்

'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கதையின் நாயகனாக நடிக்கும் பிரசாந்துடன், மூத்த நடிகர் கார்த்திக் இணைந்து நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'பொன்மகள் வந்தாள்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜே ஜே பிரெடரிக் என்பவர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மூத்த நடிகர் கார்த்திக் இணைந்திருக்கிறார். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் பிரசாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். மூத்த நடிகை சிம்ரன் அழுத்தமான கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
 
மூத்த நடிகர் கார்த்திக் இதற்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'தேவ்' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top