மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒமிக்ரானின் புதிய வகை XE மாறுபாட்டின் முதல் நோயாளி குறித்த செய்தி வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய தகவலை வழங்கியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் (MoHFW) மற்றும் மும்பை மாநாகராட்சி ஆகியவை கொரோனாவின் புதிய துணை மாறுபாடு XE தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது குறித்து மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளன. மும்பை மாநகராட்சியின் கூற்றுக்களை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. நோயாளியின் மாதிரியின் மரபணு வரிசைமுறை,  XE மாறுபாட்டை உறுதிப்படுத்தவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 
 
எனினும், இந்த விவகாரத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆராய்ச்சி அமைப்பான INSACOG அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
முன்னதாக புதன்கிழமை, கிரேட்டர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன், மரபணு வரிசைமுறையின் கீழ் சோதனைக்கு அனுப்பப்பட்ட 230 மாதிரிகளில், புதிய துணை மாறுபாடு XE தொற்று பாதிப்பு இருப்பதாக  ஒரு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. இந்த தொற்று பாதிப்பு தொடர்பாக, கொரோனாவின் எந்த அறிகுறியும் இல்லாத, 50 வயது பெண் ஒருவருக்கு கொரோனாவின் புதிய துணை மாறுபாடு XE தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய மாறுபாட்டை உறுதிப்படுத்துவதற்காக மாதிரி தேசிய உயிரியல் மருத்துவ மரபியல் நிறுவனத்திற்கு (NIBMG) அனுப்பப்படும் என மும்பை மாநாகராட்சி தெரிவித்துள்ளது. 
 
இந்த புதிய மாறுபாடு குறித்து, உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு 'XE' மாறுபாடு இங்கிலாந்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும்,  ஒமைக்ரானின்  ba.2  மாறுபாட்டை விட  XE துணை மாறுபாடு 10% அதிகமகா பரவும் தன்மை கொண்டிருப்பதாக கூறுகிறது. 
 
ஒமிக்ரான் மாறுபாட்டின் ஒரு பகுதியாக XE பிறழ்வு தற்போது கண்காணிக்கப்படுகிறது என்று WHO கூறுகிறது. ஓமிக்ரானின் அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, தோல் எரிச்சல் போன்றவை அடங்கும். UK சுகாதாரத் துறை XD, XE மற்றும் XF ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது. XD வகை ஒமிக்ரானின்  BA.1 மாறுபாட்டில் இருந்து பெறப்பட்டது. புதிய மாறுபாடு XE ஆக இருந்தால், அது  ஒமைக்ரானின் துணை வகை BA.2 மாறுபாட்டை  விட சுமார் 10 சதவீதம் வீரியமுள்ளதாக இருக்கலாம் என உகல சுகாதார அமைப்பு கூறுகிறது.
 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top