சரத்குமாரின் என்கவுன்ட்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சரத்குமாரின் என்கவுன்ட்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் 'என்கவுன்ட்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 
'இன்பா', 'மயங்கினேன் தயங்கினேன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் டி வேந்தன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'என்கவுன்ட்டர்'. இந்தப் படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருக்கிறார்.
 
இவர்களுடன் நிழல்கள் ரவி, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைத்திருக்கிறார். யு ஆர் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டி ராஜேஸ்வரி பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
 
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தை மையப்படுத்தி கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சரத்குமார் தாடியுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கம்பீரமாக தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருப்பதால் 'என்கவுன்ட்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top