முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டு!

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசின் துணை அமைப்பான ராஜீவ் காந்தி வளர்ச்சி கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த ‘பிரதீக்‌ஷா 2030’ என்ற கருத்தரங்கம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடன் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் பலன் இருக்காது. சிறிய, நடுத்தர தொழில்கள்தான் பாதிக்கப்படும். 
 
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்துறை சீர்குலைந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் 2016-ம் ஆண்டு நன்கு சிந்திக்காமல் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top