பொங்கல் வெளியீட்டில் இணைந்த 'ஸ்கெட்ச்'

பொங்கல் வெளியீட்டில் இணைந்த \'ஸ்கெட்ச்\'

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்கெனவே சில படங்களின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளன. சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்', பிரபுதேவா, ஹன்சிகா நடிக்கும் 'குலேபகாவலி', அரவிந்த்சாமி, அமலா பால் நடிக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன், மீனாட்சி நடிக்கும் 'மதுர வீரன்', விமல், ஆனந்தி நடிக்கும் 'மன்னர் வகையறா' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

இப்போது விக்ரம், தமன்னா நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று படத்தின் சென்சார் நிறைவடைந்து, 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. V கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக 'ஸ்கெட்ச்' உருவாகியுள்ளது.

'ஸ்கெட்ச்' படமும் பொங்கல் போட்டியில் இணைந்துள்ளதை அடுத்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதியே 7 படங்கள் வெளியாக உள்ளன.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top