காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்க கூட்டம்!

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு நலச்சங்க கூட்டம்!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி திங்கட்கிழமை தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மறுவாழ்வு சங்கக் கூட்டம் மதுரை கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அச்சமயத்தில், இந்த கூட்டத்திற்கு திரு.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். கூட்ட நடவடிக்கைகளின் போது பத்து ஏழை நபர்களுக்கு அரிசி முதலியன வழங்கப்பட்டன.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு கை ஜாடையில் விளக்கி கூறும் திறமை படைத்த இரண்டு பேருக்கும், நன்றாக எழுத தெரிந்த ஒருவருக்கும், காலம் தவறாமையை அனுசரிக்கும் ஒருவருக்கும் ஆகிய நான்கு பேருக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்செல்வம் மற்றும் ஆனந்த் அவர்கள் மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சா தத்துவங்களைப் பற்றியும், சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தியாகப் பயணங்கள் பற்றியும் விரிவாக விவரித்தார்.

இந்த விவாதங்களில் சங்க உறுப்பினர் திரு.சந்தீப், தமிழ்செல்வம், ஆனந்த், பாலமுருகன் மற்றும் சுந்தரமூர்த்தி முதலியோர் அவர்கள் பெரும் பங்கு வகித்தார்கள். மேலும் இவரே சங்கத்தின் கூட்டம் நடைபெறுவதற்காகவும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top