அம்மனுக்கு காய்ச்சிய கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு!
Posted on 30/07/2022

ஒவ்வொரு வருடமும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மதுரை அருகே ஆடி வெள்ளியன்று நேற்று அம்மனுக்கு கூழ் காய்ச்சிய நிலையில் அந்த கூழில் பக்தர் ஒருவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சி கொண்டிருக்கும் போது பக்தர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். கொதிக்கும் கூழில் அவர் விழுந்ததால் உடனடியாக அவருக்கு வலிப்ப வந்ததாகவும், இதனை அடுத்து கூழ் காய்ச்சிய அண்டா தவறி விழுந்ததால் அவர் உடல் முழுவதும் வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூழ் காய்ச்சும் போது உயிரிழந்த பக்தர் பெயர் முருகன் என்றும் அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
Tags: News