மதுரையில் 71வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
Posted on 16/08/2017

71வது சுதந்திர தினத்தையொட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8:35 மணிக்கு கலெக்டர் வீரராகவராவ் தேசியகொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 315 பயனாளிகளுக்கு 48 லட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து ஓசிபிஎம் பள்ளி, ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி, சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கலைக் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தனக்கன்குளம் அரசு பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் ஏறுதலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்மண்டல ஐ.ஜி., சைலேஷ்குமார், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், டி.ஐ.ஜி., பிரதீப் குமார், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், டி.ஆர்.ஓ., குணாளன், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, டீன் (பொறுப்பு) மருதுபாண்டியன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர்கள் பங்கேற்றனர்.
Tags: News, Madurai News, Lifestyle