மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே - வெளியான பரபரப்பு தகவல்!

மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே - வெளியான பரபரப்பு தகவல்!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எந்த நாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் தனது விமானத்துடன் மாலத்தீவில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கோத்தபய ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளதாகவும், அது இன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி, மெய்ப்பாதுகாவலர் மற்றும் விமானியுடன் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து, அவரது அதிபர் மாளிகை சூரையாடப்பட்ட பின்னர், தலைமறைவாக வாழ்ந்து வந்தார். கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கு, பின்னர் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன அதிபராக பொர்றுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
 
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன்னர் இலங்கையில் இரகசிய இடத்தில் பதுங்கியிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் தனிப்பட்ட வீட்டில் பதுங்கியிருந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், அத்தகைய செய்திகள் ஆதாரமில்லாதவை என இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை என இலங்கை விமானப்படை செய்தித் தொடர்பாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த கூற்றுக்கள் இலங்கை விமானப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும் எனவும் அவர் கூறினார்.
 
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதி, பிரதமர் என யாரும் நாட்டில் இல்லாத பட்சத்தில், அரசு நிர்வாக பொறுப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு செல்லும். எனினும், இந்த பதவியில் அவர் ஒரு மாதம் இருக்க முடியும். இதன் போது நாட்டில் ஜனாதிபதியை தெரிவு செய்து அரசாங்கத்தின் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே இப்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில் சபாநாயகர் அபயவர்தன ஜனாதிபதியாகி நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளதும்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோடிய போதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இலங்கையின் அதிபர் மாளிகை பாராளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டின் தலைவர்கள் மீது மிகவும் கடும் கோபமாக இருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு தீர்வை விரும்புகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தின் மீதுதான் அதிக வெறுப்பு இருக்கிறது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை இலங்கையில் அதிபர் பிரதமர், நிதியமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் ஆகிய பதவிகளில் பதவி வகித்து வந்தனர். அதனால், இவர்களை சிக்கலில் சிக்க வைப்பதில் இவர்களின் பொறுப்பும் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
 
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடில், வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார். 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top