விஷாலின் 'எனிமி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷாலின் \'எனிமி\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'எனிமி' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'அரிமா நம்பி', 'இரு முகன்', 'நோட்டா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'எனிமி'. இந்தப் படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, எஸ். தமன் இசை அமைக்கிறார்.
 
'அவன் இவன்' என்ற படத்திற்கு பிறகு நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் நவீன இயந்திர துப்பாக்கியை பூமியை நோக்கி வைத்திருப்பதும், அவருடைய தலை பக்கவாட்டில் குனிந்து இருப்பதும் பெரும் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால் இதற்கு ஆர்யாவின் ரசிகர்களும், விஷாலின் ரசிகர்களும் இணைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top