அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா நியமனம்!

அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா நியமனம்!

அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, இந்தியர்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை  வழங்கி வருகிறார். துணை அதிபராக ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரீஸ் இருக்கிறார். இந்த கிரீடத்தில் மகுடம் தரிக்கும் வகையில், அமெரிக்காவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான துணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அமெரிக்க செனட்டில் நேற்று நடந்த வாக்குப்பதிவில் 51-49 என்ற வாக்கு விகிதத்தில் அவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் நீதித்துறையின் அதிகாரம் மிக்க 3வது நபர் என்ற பெருமையையும், இந்த பொறுப்பை வகிக்கும் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.  

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top