அண்ணாதுரையில் அர்ப்பணிப்புடன் நடித்த விஜய் ஆண்டனி!

அண்ணாதுரையில் அர்ப்பணிப்புடன் நடித்த விஜய் ஆண்டனி!

ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை', வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு அன்று படத்தின் பத்து நிமிடக் காட்சிகளை திரையிட்டு ரசிகர்களின், திரையுலகினரின் பாராட்டைப் படக்குழுவினர் பெற்றார்கள். 'அண்ணாதுரை' நிச்சயம் விஜய் ஆண்டனிக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என பலரும் பாராட்டினார்கள்.

விஜய் ஆண்டனி நாயகனாக இரு வேடங்களில் நடிக்க ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜுவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப்பயிற்சியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.

'அண்ணாதுரை' பட அனுபவம் பற்றி இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காகத் தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி. வசந்தபாலனிடம் 'கிளாஸ்' ஆக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான 'கமர்ஷியல்' படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன். 'அண்ணாதுரை' கதையை விஜய் ஆண்டனியை தவிர்த்து வேறு யாரையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும். 'அண்ணாதுரை' படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. 'அண்ணாதுரை' தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30 ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்" என்கிறார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top