புடின் ஆரோக்கியமாக இருக்கிறார் - ரஷ்யா

புடின் ஆரோக்கியமாக இருக்கிறார் - ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆரோக்கியமாக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாரவ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்துள்ள அவர், விளாதிமிர் புடின் நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதை காணும் புத்திசாலிகள் யாருக்கும் இதுபோன்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
புடின் எவ்வாறு இருக்கிறார் என்பதை மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உள்ள போதிலும் வேண்டுமென்றே வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய செர்கி லாரவ், அவர்களின் மனசாட்சிக்கே இதை விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.
 
முன்னதாக, விளாதிமிர் புடினுக்கு ரத்து புற்றுநோய் இருப்பதாக செய்தி வெளியானது. உக்ரைன் தரப்பில் இருந்தும், இங்கிலாந்தின் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்தும் இதுபோன்ற செய்திகள் கசியவிடப்பட்டன. இந்நிலையில், இந்த செய்திகளுக்கு ரஷ்ய தரப்பில் இருந்து முதல்முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர், உக்ரைனிடம் இருந்து கிழக்குப் பகுதிக்கு சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கே முன்னுரிமை என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்தார். மேலும், நவீன நாஜிக்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருவதாகக் கூறப்படுவதை ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top