அமெரிக்கர்களுக்கு தலா ஒரு லட்சம் கொரோனா நிவாரணம்!

அமெரிக்கர்களுக்கு தலா ஒரு லட்சம் கொரோனா நிவாரணம்!

இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை உள்ளடக்கிய சுமார் 139 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க மீட்பு திட்டம் என்ற திட்டத்தை அதிபர் ஜோ.பைடன் முன்மொழிந்திருக்கிறார்.

செனட் சபையில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியின் 50 உறுப்பினர்களும், எதிராக குடியரசு கட்சிகளின் 50 உறுப்பினர்களும் வாக்களித்தனர். செனட் சபை தலைவரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அடுத்தகட்டமாக இந்த மசோதா ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அங்கு இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர அதிபர் ஜோ.பைடன் தீவிரம் காட்டி வருகிறார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top