சமுத்திரக்கனியின் 'ஏலே' ஆடியோ வெளியீடு

சமுத்திரக்கனியின் \'ஏலே\' ஆடியோ வெளியீடு

எம் மண்ணின் மங்கையான மதுமதி நாயகியாக அறிமுகமாகும் 'ஏலே' படத்தின் ஆடியோ வெளியாகி இருக்கிறது.

'பூவரசம் பீப்பீ', 'சில்லு கருப்பட்டி' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க பெண் படைப்பாளியாக உயர்ந்து இருப்பவர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஏலே'. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் 'காலா' பட புகழ் மணிகண்டன், எம்மண்ணின் மங்கையான மதுமதி உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கேபர் வாசுகி மற்றும் அருள் தேவ் ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் பங்குபற்றாமல் வீடியோ மூலம் அறிமுக நடிகை மதுமதி மற்றும் புதுமுக இசை அமைப்பாளர் கேபர் வாசுகி ஆகியோர் தங்களின் அனுபவங்களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து இப்படத்தின் கிராமிய மணம் கமழும் பாடல்களை பாடிய பாடகர்கள் சித்திரசேனன், கடல் வேந்தன், பாடகி ரோஜா ஆதித்யா ஆகியோர் மேடையேறி, பாடலைப் பாடி வருகை தந்திருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
 
படத்தைப் பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் பேசுகையில்,' 2009ஆம் ஆண்டில் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களிடம் உதவியாளராக பணியாற்றும் போதே எழுதினேன். அவர்களிடத்தில் இந்தக் கதையை கூறியபொழுது எங்களுக்கு படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதனை நாங்களே தயாரிக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள். காலம் கனிந்து அவர்களுடைய முதல் தயாரிப்பில் இந்தக் கதை 'ஏலே' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மஞ்ச நாயக்கன்பட்டி கிராம மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்கினார்கள். கொரோனா காலகட்டத்தில் இப்படத்தின் பணிகள் நடைபெற்றது. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது எமக்கு தனித்துவமான ஈர்ப்பு இருக்கிறது. நான் முதலில் இயக்க தீர்மானித்திருந்த கதையை, மூன்றாவது படமாக இயக்கியிருக்கிறேன். பிப்ரவரி 12ஆம் திகதியன்று இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.' என்றார்.
 
இந்நிகழ்வில் நடிகர் சமுத்திரகனி, தயாரிப்பாளர்கள் புஷ்கர் காயத்ரி, ஒரு நாயகன் மணிகண்டன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இயக்குனர் ஹலிதா சமீம், தயாரிப்பு வடிவமைப்பாளர் கௌதம், படத்தொகுப்பாளர் ரேமண்ட் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். இரவு 7 மணி அளவில் சமூக வலைதளத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top